TNPSC Thervupettagam
April 8 , 2018 2422 days 808 0
  • மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்திற்கான அணு சக்தித் துறையின் ஒரு அங்கமான இராஜா ரமன்னா மையம் நீரிலுள்ள யுரேனியத்தின் அளவை அளவிட ஃபுளோரி மீட்டர் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது.
  • இக்கருவியானது நீரில்1 PPB (Parts per Billion) முதல் 100 PPB வரை யுரேனியத்தின் அளவை அளவிடும் சக்தி கொண்டதாகும்.
  • அதிகளவில் இந்த கருவிகளை உற்பத்தி செய்வதற்காக அணுசக்தித் துறையானது தன்னுடைய இந்தத் தொழில்நுட்பத்தைத் தன்னுடைய மற்றொரு அங்கமான இந்திய மின்னணுவியல் கழகத்திற்கு அளித்துள்ளது.
  • பஞ்சாப்பில் நீர் வளங்களில் யுரேனியம் அபாயகரமான அளவில் இருப்பதால் யுரேனியத்தை அளவிட அங்கு இக்கருவிகள் உதவிகரமாக இருக்கும்.
  • யுரேனியம் என்பது கதிர்வீச்சு மூலக்கூறாகும். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமானது குடிநீரில் யுரேனியத்தின் அளவானது 66 PPB வரை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்