TNPSC Thervupettagam

ஃபெங்கல் புயல் நிவாரணம்

December 11 , 2024 11 days 102 0
  • இந்திய உள்துறை அமைச்சகம் ஆனது, ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) இருந்து தமிழகத்திற்கு 944.80 கோடி ரூபாயை வழங்குவதற்காக ஒப்புதல் அளித்துள்ளது.
  • SDRF என்பது மாநில அரசுகள் ஆனது, அறிவிக்கப்பட்டப் பேரிடர்களுக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் ஒரு முக்கிய நிதியாகும்.
  • பொதுப் பிரிவு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான SDRF ஒதுக்கீட்டில் 75% பங்கினை மத்திய அரசு வழங்குகிறது.
  • ஆனால் சிறப்புப் பிரிவு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கான (வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர்) SDRF ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்களிப்பு 90% ஆகும்.
  • 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 46வது பிரிவின் படி, "கடுமையான இயற்கைப் பேரழிவு ஏற்படும் சூழலில், SDRF நிதியில் போதுமான நிதி இல்லை எனில், மாநிலப் பேரிடர் மீட்பு நிதிக்கு NDRF கூடுதல் நிதியினை வழங்குகிறது".

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்