கனடாவில், மில்லியன் கணக்கான அளவில் தவணைகள் வழங்குவதற்கு உதவும் 8 கிலோ அளவிலான ஃபென்டானைலை வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூரத்தில் உள்ள இரண்டு நிறுவனங்கள் ஃபென்டானைல் மூல வேதிப்பொருட்களை வைட்டமின் C என்று தவறாக பெயரிட்டு, அனுப்பியதாக அமெரிக்க அரசு வழக்குத் தொடர்ந்தது.
ஃபென்டானைல் என்பது போதைப்பொருள் அடிமைப் பழக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு செயற்கை ஓபியாய்டு ஆகும்.
இது ஹெராயினை விட தோராயமாக 50 மடங்கு மிக அதிக சக்தி வாய்ந்ததாகவும், மார்பினை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், சீனாவானது ஃபெண்டானைலை கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருளாக வகைப்படுத்தியது பின்னர் அந்தப் பட்டியலில் சில இரசாயனங்களையும் சேர்த்தது.