இன்ட்கோசெர்வ் நிறுவனமானது ஜெர்மனியிலுள்ள FLOCERT என்ற அமைப்பிடமிருந்து ஃபேர்டிரேடு (Fairtrade certification - நியாயமான வர்த்தகம்) என்ற சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதலாவது கூட்டுறவு நிறுவனமாக மாறியுள்ளது.
இன்ட்கோசெர்வ் என்பது நீலகிரியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளின் தொழில் துறைக் கூட்டுறவின் தலைமை அமைப்பாகும்.
இன்ட்கோசெர்வ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரியா சாஹூ, முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அவர்களிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
ஃபேர்டிரேடு சான்றிதழ் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற உற்பத்திப் பொருட்களுக்கான தரச் சான்றிதழ் முறையாகும்.
ஜெர்மனியின் போன் (Bonn) எனும் ஒரு இடத்தினைத் தலைமையகமாகக் கொண்ட ஃபேர்டிரேடு இன்டர்நேசனல் அமைப்பானது 72 நாடுகளில் இயங்கி வருகிறது.
இன்ட்கோசெர்வ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய தேயிலைக் கூட்டுறவு அமைப்பு ஆகும்.