ஃபோர்ப்ஸ் ஆசியா அமைப்பின் ஆற்றல்மிக்க வணிகப் பெண்மணிகள் பட்டியல் 2022
November 16 , 2022 869 days 480 0
ஃபோர்ப்ஸ் ஆசியா அமைப்பானது தனது வருடாந்திர ‘ஆசியாவின் ஆற்றல்மிக்க வணிகப் பெண்மணிகள்' பட்டியலை வெளியிட்ட நிலையில், இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 20 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
சோமா மோண்டல், கஜல் அலக் மற்றும் நமிதா தாபர் ஆகிய மூன்று பெண்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணிகள் ஆவர்.
கஜல் அலக், ஹோனாசா நுகர்வோர் மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
சோமா மோண்டல், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார்.
நமிதா தாபர், எம்க்யூர் பார்மாவின் இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற மற்ற பெண்மணிகள்
சோய் சூ யியோன்- நாவேர் எனப்படும் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
ஜப்பானின் இரட்டை சகோதரிகளான அன்னா நகாஜிமா மற்றும் மிசுகி நகாஜிமா - கோலி எனப்படும் திறன்பேசி சார்ந்த விளையாட்டுச் செயலியினை உருவாக்கிய நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்.
வல்லயா சிரதிவாட் - தாய்லாந்தின் மத்திய பட்டானா நிறுவனத் தலைமை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.