TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் ஆசியா அமைப்பின் ஆற்றல்மிக்க வணிகப் பெண்மணிகள் பட்டியல் 2022

November 16 , 2022 610 days 336 0
  • ஃபோர்ப்ஸ் ஆசியா அமைப்பானது தனது வருடாந்திர ‘ஆசியாவின் ஆற்றல்மிக்க வணிகப் பெண்மணிகள்' பட்டியலை வெளியிட்ட நிலையில், இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 20 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • சோமா மோண்டல், கஜல் அலக் மற்றும் நமிதா தாபர் ஆகிய மூன்று பெண்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணிகள் ஆவர்.
  • கஜல் அலக், ஹோனாசா நுகர்வோர் மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
  • சோமா மோண்டல், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார்.
  • நமிதா தாபர், எம்க்யூர் பார்மாவின் இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்ற மற்ற பெண்மணிகள்
    • சோய் சூ யியோன்- நாவேர் எனப்படும் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
    • ஜப்பானின் இரட்டை சகோதரிகளான அன்னா நகாஜிமா மற்றும் மிசுகி நகாஜிமா - கோலி எனப்படும் திறன்பேசி சார்ந்த விளையாட்டுச் செயலியினை உருவாக்கிய நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்.
    • வல்லயா சிரதிவாட் - தாய்லாந்தின் மத்திய பட்டானா நிறுவனத் தலைமை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்