ஃபோர்ப்ஸ் இதழின் உலகளவில் முன்னணியில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட 50 பெண்மணிகளின் பட்டியல் 2025
January 30 , 2025 24 days 115 0
ஃபோர்ப்ஸ் இதழின் உலகளவில் முன்னணியில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட 50 பெண்மணிகளின் பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
உயிரி மருந்துத் தொழில்துறையின் முக்கியத் தொழில்முனைவரும், இந்தியாவின் மிக வெற்றிகரமான மற்றும் சுயமாக உழைத்து முன்னேறிய பெண்களில் ஒருவருமான பெங்களூருவைச் சேர்ந்த கோடீஸ்வரரான கிரண் மஜும்தார்-ஷா இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஊர்மிளா ஆஷர் குஜராத்தி சமையல் நிபுணத்துவத்தில் வேரூன்றிய குஜ்ஜு பென் நா நாஸ்டா என்ற உணவு வணிகத்தைத் தொடங்கினார்.
1952 ஆம் ஆண்டில் பிறந்த ஷீலா படேல், குடிசைவாசிகளின் உரிமைகளுக்காக எனப் போராடுவதற்கும், சமமான நகர்ப்புற இடங்களை உருவாக்குவதற்கும் மிகப்பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு புகழ்பெற்ற ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார்.
1984 ஆம் ஆண்டில் இவர் மும்பையில் உள்ள முக்கியப் பகுதி வள மையங்களை மேம்படுத்துவதற்கான சங்கத்தினை (SPARC) இணைந்து நிறுவினார்.