TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் 2000 முன்னணி நிறுவனங்களின் பட்டியல்

June 20 , 2023 524 days 281 0
  • 2023 ஆம் ஆண்டு உலகின் 2,000 முன்னணி நிறுவனங்களின் ஒரு தரவரிசையினைப் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது எட்டு இடங்கள் முன்னேறி இதில் 45வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • ஃபோர்ப்ஸ் இதழினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் 2000 முன்னணிப் பொது நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய நிறுவனம் இதுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டு தரவரிசையில் 105வது இடத்தில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • HDFC வங்கி 128வது இடத்திலும் (2022 ஆம் ஆண்டில் 153வது இடம்) ICICI வங்கி 163 வது (2022 ஆம் ஆண்டில் 204 வது இடம்) இடத்திலும் உள்ளன.
  • NTPC லிமிடெட் நிறுவனமானது இப்பட்டியலில் 433வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இப்பட்டியலில் இடம் பெற்ற மற்ற இந்திய நிறுவனங்கள்: ONGC 226, HDFC 232, LIC 363, ஆக்சிஸ் வங்கி (423) மற்றும் NTPC (433) ஆகியவையாகும்.
  • 3.7 டிரில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் வங்கி 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இதில் அதானி எண்டர்பிரைசஸ் 1062வது இடத்திலும், அதானி பவர் 1488வது இடத்திலும், அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 1598வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்