ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் பில்லியனர்கள் பட்டியல் 2024
April 7 , 2024 261 days 408 0
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெர்னார்ட் அர்னால்ட் உலகின் மிகவும் பெரிய பணக்காரர் என்ற இடத்தினைத் தக்க வைத்துள்ளார்.
சமீபத்திய ‘2024 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் பில்லியனர்கள் பட்டியலின்’ படி, முகேஷ் அம்பானி சுமார் 116 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார மனிதராக உள்ளார்.
மேலும் அம்பானி உலகின் 9வது பணக்கார மனிதர் ஆவார்.
பிரத்தியேக 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளவர்களின் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் இவராவார்.
இரண்டாவது இடத்தில் 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இடம் பெற்றுள்ளார்.
சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்காரப் பெண்ணாகத் தொடர்ந்து இடம் பெற்று உள்ளார் என்பதோடு அவர் நாட்டின் 4வது பணக்கார மனிதராக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக, இந்தப் பட்டியலில் சுமார் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற நிலையில் இது முந்தைய ஆண்டில் 169 ஆக இருந்தது.
இந்தியா உலக அளவில், பில்லியனர்களின் (கோடீஸ்வரர்களின்) எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள 200 இந்தியர்களில் 25 பேர் முதல் முறையாக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.