அமெரிக்கா 813 கோடீஸ்வரர்கள்/பில்லியனர்களுடன் முதலிடத்திலும், சீனா சுமார் 473 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா சுமார் 200 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
எலோன் மஸ்க் 433.9 பில்லியன் டாலர் மதிப்பிலான நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரியப் பணக்காரராக பட்டியலிடப்பட்டுள்ளார்.
அமேசானின் ஜெஃப் பெசோஸ் 239.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசனை முந்தி உலகளவில் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங், முதல் முறையாக முன்னணி 10 பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.