TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இதழின் சுய உழைப்பில் முன்னேறிய 100 பணக்காரப் பெண்களின் பட்டியல்

July 15 , 2023 353 days 232 0
  • ஜெய்ஸ்ரீ உல்லால் மற்றும் இந்திரா நூயி உட்பட நான்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள், ஃபோர்ப்ஸ் இதழின் அமெரிக்காவின் மிகவும் வெற்றிகரமான சுய உழைப்பில் முன்னேறிய 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • கணினி வலையமைப்புச் சேவை நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெயஸ்ரீ உல்லால், இந்தப் பட்டியலில் 15வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • சின்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் நீரஜா செத்தி இந்தப் பட்டியலில் 25வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • கன்ஃப்ளூயண்ட் எனப்படுகின்ற மேகக் கணிமை நிறுவனத்தின் இணை நிறுவனர் நர்கேஹே, இப்பட்டியலில் 50வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி ஃபோர்ப்ஸ் பட்டியலில் 77வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • இதில் கட்டிடப் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் நிறுவனர் டயான் ஹென்ட்ரிக்ஸ் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்