‘ஃப்ரீடம் ஹவுஸ்’ எனப்படுகின்ற, அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியினைப் பெறும் லாப நோக்கற்ற அமைப்பானது ‘உலக நாடுகளின் சுதந்திரம் 2023’ என்ற தலைப்பிலான தனது வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக "ஓரளவுச் சுதந்திரமான" ஒரு நாடாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனநாயகம் ஆனது தனது "அடித்தளத்தினை இழந்து வருகிறது" என்று இந்த அறிக்கை கூறுகிறது.
சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் பற்றியக் குறியீடுகளைத் தரவரிசைப் படுத்தச் செய்வதற்காக இது ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
திபெத், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகியவை இந்தக் குறியீட்டில் உலகிலேயே குறைவான சுதந்திரம் கொண்ட நாடாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.