ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஃப்ரேசர் தீவு அதிகாரப்பூர்வமாக ககாரி என மறுபெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை ஃப்ரேசர் தீவு என்று அழைக்கப்பட்ட இத்தீவிற்கு இப்பகுதியின் பாரம்பரிய உரிமையாளர்களான புட்சுல்லா மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ககாரி என மறுபெயரிட முடிவு செய்யப்பட்டது.
ககாரி பகுதியானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசிக்கும் புட்சுல்லா மக்கள் மத்தியில் மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
புட்சுல்லா மொழியில் "ககாரி" என்றப் பெயருக்கு "சொர்க்கம்" என்று பொருள் கூறப் படுகிறது.
பூர்வீக மொழிகள், வரலாறுகள் மற்றும் மரபுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த மறுபெயரிடுதல் நடவடிக்கையானது நல்லிணக்கத்தின் ஒரு அடையாளமாக கருதப் படுகிறது.
இது உலகின் மிகப்பெரிய மணல் தீவு மற்றும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகும்.