ஃப்ளோஹார்ஸ், போலியான ஆண்ட்ராய்டு தீநிரலானது, கிழக்கு ஆசியாவில் உள்ள நுகர்வோரைக் குறி வைத்து, செயலிகளில் பரவலாக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
அவை பயனர் தகவல்கள் மற்றும் இரண்டடுக்கு அங்கீகாரக் குறியீடுகள் உள்ளிட்டத் தகவல்களைத் திருடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
தகவல் திருடும் நிரல் கொண்ட மின்னஞ்சல்கள் மூலமாக, செயலியினைப் பதிவிறக்கி, நிலுவையில் உள்ள கட்டணச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வகையிலான சேவையாக ஃப்ளூ ஹார்ஸ் தீநிரலானது அதிக வசதி கொண்ட இலக்குப் பயனர்களுக்கு அனுப்பப் படுகிறது.