TNPSC Thervupettagam

அஃபனசி நிகிடின் கடல்குன்று (Seamount)

March 31 , 2024 242 days 300 0
  • இந்திய அரசானது, இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நிலப்பரப்பில் உள்ள தனது அதிகார வரம்பிற்குள் உட்படாத இரண்டு மாபெரும் பகுதிகளில் ஆய்வுகள் மேற் கொள்வதற்கான உரிமைகளை கோரி ஜமைக்காவில் உள்ள சர்வதேசக் கடற்படுகை ஆணையத்திடம் (ISBA) விண்ணப்பித்துள்ளது.
  • இவற்றுள் ஒரு பகுதியான அஃபனசி நிகிடின் கடல்குன்று என அழைக்கப்படும் கோபால்ட் நிறைந்த முகட்டினை ஆய்வு செய்வதற்காக வேண்டி கோரப்பட்ட இந்த விண்ணப்பமானது இந்தியாவின் உத்தி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சி ஆகும்.
  • இலங்கை அரசானது, ஏற்கனவே ஒரு தனிச் சட்டங்களின் கீழ் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான உரிமைகளை கோரியுள்ளது.
  • ஆனால் இந்தியாவின் விண்ணப்பம் ஆனது, அதே பகுதியில் உளவுப் பணிகளை மேற் கொண்ட சீனக் கப்பல்கள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின் தகவல்கள் மூலம் ஒரு வலுவான ஆதரவினைப் பெற்றுள்ளது.
  • அஃபனசி நிகிடின் கடல்குன்று என்பது இந்தியப் பெருங்கடலின் மத்தியப் படுகையில் உள்ள 400 கி.மீ.  நீளமும் 150 கி.மீ அகலமும் கொண்ட ஒரு நிலம் சார் அம்சமாகும்.
  • இது இந்தியக் கடற்கரையிலிருந்து சுமார் 3,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • சுமார் 4,800 கி.மீ. ஆழத்தில் இருந்து, சுமார் 1,200 மீட்டர் வரையிலான தொலைவிற்கு கோபால்ட், நிக்கல், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகியவற்றினை உள்ளடக்கிய படிவுகள் நிறைந்துள்ளது.
  • உலக நாடுகளுக்கு கடல்பரப்பில் 200 நாட்டிகல் மைல்கள் வரையிலான தொலைவு வரையிலும், அந்தத் தொலைவிலான கடல்பரப்பின் கீழமைந்த கடல் படுகைகள் மீதுமான பிரத்தியேக உரிமைகள் உள்ளன.
  • கடலால் சூழப்பட்ட சில நாடுகளானது அவற்றின் எல்லை மற்றும் கண்டத்திட்டு என அழைக்கப்படும் கடல்பரப்பின் ஒரு பகுதியான 200 நாட்டிகல் மைல்களுக்கும் அப்பாற் பட்ட ஆழ்கடல் விளிம்பு பகுதியை இணைக்கும் வகையிலான இயற்கையான நிலப் பரப்பைக் கொண்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்