இந்திய அரசானது, இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நிலப்பரப்பில் உள்ள தனது அதிகார வரம்பிற்குள் உட்படாத இரண்டு மாபெரும் பகுதிகளில் ஆய்வுகள் மேற் கொள்வதற்கான உரிமைகளை கோரி ஜமைக்காவில் உள்ள சர்வதேசக் கடற்படுகை ஆணையத்திடம் (ISBA) விண்ணப்பித்துள்ளது.
இவற்றுள் ஒரு பகுதியான அஃபனசி நிகிடின் கடல்குன்றுஎன அழைக்கப்படும் கோபால்ட் நிறைந்த முகட்டினை ஆய்வு செய்வதற்காக வேண்டி கோரப்பட்ட இந்த விண்ணப்பமானது இந்தியாவின் உத்தி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சி ஆகும்.
இலங்கை அரசானது, ஏற்கனவே ஒரு தனிச் சட்டங்களின் கீழ் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான உரிமைகளை கோரியுள்ளது.
ஆனால் இந்தியாவின் விண்ணப்பம் ஆனது, அதே பகுதியில் உளவுப் பணிகளை மேற் கொண்ட சீனக் கப்பல்கள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின் தகவல்கள் மூலம் ஒரு வலுவான ஆதரவினைப் பெற்றுள்ளது.
அஃபனசி நிகிடின் கடல்குன்று என்பது இந்தியப் பெருங்கடலின் மத்தியப் படுகையில் உள்ள 400 கி.மீ. நீளமும் 150 கி.மீ அகலமும் கொண்டஒரு நிலம் சார் அம்சமாகும்.
இது இந்தியக் கடற்கரையிலிருந்து சுமார் 3,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சுமார் 4,800 கி.மீ. ஆழத்தில் இருந்து, சுமார் 1,200 மீட்டர் வரையிலான தொலைவிற்கு கோபால்ட், நிக்கல், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகியவற்றினை உள்ளடக்கிய படிவுகள் நிறைந்துள்ளது.
உலக நாடுகளுக்குகடல்பரப்பில் 200 நாட்டிகல் மைல்கள் வரையிலான தொலைவு வரையிலும், அந்தத் தொலைவிலான கடல்பரப்பின் கீழமைந்த கடல்படுகைகள் மீதுமான பிரத்தியேக உரிமைகள் உள்ளன.
கடலால் சூழப்பட்ட சில நாடுகளானது அவற்றின் எல்லை மற்றும் கண்டத்திட்டு என அழைக்கப்படும் கடல்பரப்பின் ஒரு பகுதியான 200 நாட்டிகல் மைல்களுக்கும் அப்பாற் பட்ட ஆழ்கடல் விளிம்பு பகுதியை இணைக்கும் வகையிலான இயற்கையான நிலப்பரப்பைக் கொண்டிருக்கலாம்.