TNPSC Thervupettagam

அஃபார் முக்கோணம்

March 23 , 2024 118 days 191 0
  • புவியியலாளர்களின் கூற்றுப்படி, வளமான மற்றும் பலவித நிலப்பரப்புகளுடன் கூடிய ஆப்பிரிக்கக் கண்டமானது தற்போது ஒரு புதிய பெருங்கடல் உருவாக்கத்திற்கு வழி வகுக்கும் ஓர் அரிய புவியியல் நிகழ்வை எதிர்கொண்டு வருகிறது.
  • ஆப்பிரிக்கக்  கொம்புமுனை எனப்படுகின்ற ஆப்பிரிக்காவின் முனைப்பகுதியில் அமைந்துள்ள அஃபார் குழிவுப் பகுதி என்றும் அழைக்கப்படும் அஃபார் முக்கோணம் என்ற இடத்தில் இந்த செயல்முறை நிகழ்ந்து வருகிறது.
  • அஃபார் முக்கோணப் பகுதியில் ஏற்படும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பிளவு 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளில் ஒரு புதிய பெருங்கடல் உருவாக நன்கு வழி வகுக்கும் என்று புவியியலாளர்கள் கணித்துள்ளனர்.
  • அஃபார் முக்கோணம் என்பது நுபியன், சோமாலி மற்றும் அரேபியத் தட்டுகள் ஆகிய மூன்று கண்டத் தட்டுகள் ஒன்றிணையும் ஒரு புவியியல் குழிவு நிலை ஆகும்.
  • கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு அமைப்பின் ஒரு பகுதியான இந்தப் பகுதியானது அஃபார் பகுதியிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக நீண்டு காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்