TNPSC Thervupettagam

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நான்சென் அகதிகள் விருது

October 5 , 2019 1759 days 718 0
  • தனது சொந்த நாடான கிர்கிஸ்தானில் அகதிகள் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவிய மனித உரிமை வழக்கறிஞரான அசிஸ்பெக் அஷுரோவ் என்பவர் இந்த ஆண்டின் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நான்சென் அகதிகள் விருதினை வென்றுள்ளார்.
  • அவரும் அவரது அமைப்பான ஃபெர்கானா பள்ளத்தாக்கு எல்லைகளைக் கடந்த  வழக்குரைஞர்கள் என்ற அமைப்பும் 10,000க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கிர்கிஸ்தான் குடியுரிமையைப் பெற உதவியுள்ளன.
  • அகதிகள் விவகாரத்தை ஒழித்த உலகின் முதலாவது நாடு கிர்கிஸ்தான் ஆகும்.
இந்த விருதுபற்றி
  • விஞ்ஞானி, துருவ ஆய்வாளர் மற்றும் அகதிகளுக்கான முதல் உயர் ஆணையரான ஃப்ரிட்ஜோஃப் நான்சனின் நினைவாக இந்த விருதுக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • அகதிகள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நாடற்ற மக்கள் ஆகியோருக்கான சிறந்த சேவையை அளிப்பதை அங்கீகரிப்பதற்காக ஒரு தனிநபர், குழு அல்லது அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • இது 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்