கர்நாடகாவின் மத்திய உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அகநாசினி நதி ராம்சர் அந்தஸ்து பெறுவதற்குப் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
அகநாசினி நதியானது, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது என்பதோடு இந்த நதியின் வழித்தடத்தின் பெரும் பகுதியானது காடுகள் மிகுந்த மலையிடுக்குகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பாய்ந்து செல்கின்றது.
இந்த அந்தஸ்தினைப் பெறுவதற்கான பட்டியலில் போட்டியாக உள்ள மற்றொரு இடம் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் ஆகும்.