உலகளவில் பயனர்களுக்கு அகன்ற இணையச் சேவையை வழங்குவதற்காக சீனா தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது.
வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் செலுத்து மையத்திலிருந்து லாங் மார்ச் 11 என்ற ராக்கெட் செலுத்து வாகனத்தின் மூலம் இந்த தகவல் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழிற்சாலை நிறுவனத்தினால் திட்டமிடப்பட்ட ஹாங்யுன் திட்டத்தின் முதலாவது செயற்கைக் கோள் இதுவாகும்.
விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஹாங்யுன் திட்டமானது 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது உலகில் உள்ள, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு அகன்ற இணையச் சேவையை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.