தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள் கீழடி அகழாய்வுத் தொகுதியின் ஒரு பகுதியான அகரம் அகழாய்வின் போது ஒரு தங்க நாணயத்தைக் கண்டறிந்துள்ளனர்.
கி.பி. 17வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நாணயமானது “வீர ராயன் நாணயம்” என்று அழைக்கப் படுகின்றது.
இதற்கு முன்பு தஞ்சாவூரில் பல்வேறு வகையான “வீர ராயன் நாணயங்கள்” கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.