TNPSC Thervupettagam

அகரு மரம் - இந்தியாவில் CITES உடன்படிக்கை விதிகள்

August 3 , 2024 115 days 192 0
  • இந்திய அரசானது, அருகி வரும் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளின் (CITES) வர்த்தகம் தொடர்பான ஒரு சர்வதேச உடன்படிக்கையின் மூலம் சமீபத்தில் ஏற்றுமதி மேற்கொள்வதற்கான ஒதுக்கீட்டினை அதிகரித்துள்ளது.
  • அகரு மரம் ஆனது, அதன் நறுமண மற்றும் மருத்துவம் சார் மதிப்புக்காக என்று அதிக மதிப்பிடப் படுகிறது.
  • இது ஊதுபத்திகள், நறுமண எண்ணெய்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த மரம் ஆனது, 1995 ஆம் ஆண்டு முதல் CITES உடன்படிக்கையின் IIவது பட்டியலில் வைக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவிலிருந்து இந்த மரத்தினை ஏற்றுமதி செய்வது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தடை செய்யப்பட்டது, ஆனால் அதன் மறு ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டது.
  • குறைந்தபட்சம் 139.89 மில்லியன் (13.989 கோடி) அகரு மரச் செடிகள் வனம் அல்லாத பகுதிகளில் சாகுபடி/தோட்டத்தில் உள்ளன.
  • CITES ஆவணத்தின்படி, இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டில் அகரு மரம் உற்பத்தி செய்யும் மற்ற நான்கு நாடுகளுடன் சேர்த்து முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகத்தின் (RST) மதிப்பாய்வின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டில் RST மதிப்பாய்வில் இருந்து இந்தியா நீக்கப்படுவதால், அகரு மரம் தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள மக்கள் பயன் அடைவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்