TNPSC Thervupettagam

அகல்நிலை (ஆஃப்லைன்) பரிவர்த்தனைகள்

January 12 , 2022 921 days 483 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, எண்ணிம முறையில் மேற்கொள்ளப்படும் சிறு மதிப்பிலான அகல்நிலைப் பரிவர்த்தனைகளுக்கான ஒரு கட்டமைப்பினை அறிமுகம் செய்துள்ளது.
  • அகல்நிலைப் பண வழங்கீடுகளை அட்டைகள், வாலட்ஸ் (பணவைப்புக் கணக்குகள்) அல்லது கைபேசி (சிறு) சாதனங்கள் போன்ற எந்தவொரு வழியாகவும்   மேற்கொள்ளலாம்.  
  • ஆனால் அவற்றை அருகாமையில் (அ) நேருக்கு நேரான ஒரு பரிவர்த்தனை போன்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளலாம்.
  • அந்த அகல்நிலைப் பரிவர்த்தனையானது மோசமான அல்லது தரம் குறைந்த இணைய வசதி அல்லது தொலைதொடர்பு இணைப்பு உள்ள பகுதிகளில், குறிப்பாக புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் (எண்ணிம) பரிவர்த்தனைகளை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்