18-வது அகில இந்திய கட்சிக் கொறடா கருத்தரங்கம் (All India Whip’s Conference) ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்றது.
‘இ-சன்ஷாத்’ (e-Sansad) மற்றும் ‘இ-விதான்’ (e-Vidhan) போன்றவற்றின் பயன்பாட்டின் மூலம், காகித ஆவணப் பயன்பாடுகளற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளுதல்” எனும் கருப்பொருளே இந்நிகழ்ச்சியின் நிரலாகக் கொள்ளப்பட்டு அகில இந்திய கட்சிக் கொறடா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
காகித ஆவணங்களின் பயன்பாடுகளின்றி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சட்டமியற்றுச் செயல்பாடுகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டக் குறிக்கோள் வழிமுறையிலான திட்டங்களே (Mission mode project) முறையே இ-ஷன்ஷாத் மற்றும் இ-விதான் ஆகியவை ஆகும்.
இ-சம்ஷாத் மற்றும் இ-விதான் ஆகியவை முறையே பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் செயல்பாடுகளை காகிதப் பயன்பாடற்றவையாகவும், வெளிப்படைத் தன்மையுடையவையாகவும், (transparent) ஆக்கப்பூர்வமானவையாகவும் (productive), மக்களுக்கு அதிகப் பொறுப்புடையவையாகவும் (Accountable) உருவாக்குவதோடு சட்டமியற்றலின் முழு செயல்முறையையும் சிக்கனப்படுத்தும் (Economise).
கொறடா
சட்ட அவைகளில் தங்கள் கட்சியின் அவை உறுப்பினர்களின் ஒழுங்கு நடத்தையை பராமரிப்பதற்கான பொறுப்புடைமையைக் கொண்ட, அவையின் உறுப்பினராகவும் உள்ள அரசியல் கட்சியின் பிரதிநிதியே கொறடா (Whip) ஆவார்.
முக்கியமான விவகாரங்களில், தங்கள் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டோடு ஒன்றியே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் தம் கட்சியின் அவை உறுப்பினர்கள் தமது வாக்கை செலுத்துகின்றனர் என்பதை உறுதி செய்வதே கொறடாவின் முக்கியப் பணியாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், அவை நடைமுறைச் சட்டங்களிலும் (Rules of House) பாராளுமன்ற விதிகளிலும் (Parliament Statute) கொறாடாவைப் பற்றிய எத்தகு குறிப்பும் இல்லை.
பாராளுமன்ற அரசாங்க அமைப்பின் பொது வசதிக்கான வழக்கத்தின் (Convention of Parliamentary Government) அடிப்படையிலேயே கொறடா ஏற்படுத்தப்பட்டுள்ளது.