TNPSC Thervupettagam

அகில இந்திய கட்சிக் கொறடா மாநாடு

January 9 , 2018 2514 days 842 0
  • 18-வது அகில இந்திய கட்சிக் கொறடா கருத்தரங்கம் (All India Whip’s Conference) ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்றது.
  • ‘இ-சன்ஷாத்’ (e-Sansad) மற்றும் ‘இ-விதான்’ (e-Vidhan) போன்றவற்றின் பயன்பாட்டின் மூலம், காகித ஆவணப் பயன்பாடுகளற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளுதல்” எனும் கருப்பொருளே இந்நிகழ்ச்சியின் நிரலாகக் கொள்ளப்பட்டு அகில இந்திய கட்சிக் கொறடா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  • காகித ஆவணங்களின் பயன்பாடுகளின்றி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சட்டமியற்றுச் செயல்பாடுகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டக் குறிக்கோள் வழிமுறையிலான திட்டங்களே (Mission mode project) முறையே இ-ஷன்ஷாத் மற்றும் இ-விதான் ஆகியவை ஆகும்.
  • இ-சம்ஷாத் மற்றும் இ-விதான் ஆகியவை முறையே பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் செயல்பாடுகளை காகிதப் பயன்பாடற்றவையாகவும், வெளிப்படைத் தன்மையுடையவையாகவும்,  (transparent) ஆக்கப்பூர்வமானவையாகவும் (productive),  மக்களுக்கு அதிகப் பொறுப்புடையவையாகவும் (Accountable) உருவாக்குவதோடு சட்டமியற்றலின் முழு செயல்முறையையும் சிக்கனப்படுத்தும் (Economise).

கொறடா

  • சட்ட அவைகளில் தங்கள் கட்சியின் அவை உறுப்பினர்களின் ஒழுங்கு நடத்தையை பராமரிப்பதற்கான பொறுப்புடைமையைக் கொண்ட, அவையின் உறுப்பினராகவும் உள்ள அரசியல் கட்சியின் பிரதிநிதியே கொறடா (Whip) ஆவார்.
  • முக்கியமான விவகாரங்களில், தங்கள் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டோடு ஒன்றியே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் தம் கட்சியின் அவை உறுப்பினர்கள் தமது வாக்கை செலுத்துகின்றனர் என்பதை உறுதி செய்வதே கொறடாவின் முக்கியப் பணியாகும்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், அவை நடைமுறைச் சட்டங்களிலும் (Rules of House) பாராளுமன்ற விதிகளிலும் (Parliament Statute) கொறாடாவைப் பற்றிய எத்தகு குறிப்பும் இல்லை.
  • பாராளுமன்ற அரசாங்க அமைப்பின் பொது வசதிக்கான வழக்கத்தின் (Convention of Parliamentary Government) அடிப்படையிலேயே கொறடா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்