அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்க கணக்கெடுப்பு 2021-22
October 16 , 2024 21 days 84 0
தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) சமீபத்திய இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2016-17 ஆம் ஆண்டு முதல் NABARD வங்கி மேற்கொண்ட இரண்டாவது கணக்கெடுப்பு இதுவாகும்.
2016-17 ஆம் ஆண்டில் 1.08 ஹெக்டேராக இருந்த விவசாயிகளின் சராசரி நிலப் பரப்பு ஆனது 2021-22 ஆம் ஆண்டில் வெறும் 0.74 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
இது மூன்றில் ஒரு பங்கு (31 சதவீதம்) குறைவைக் குறிக்கிறது.
2016-17 ஆம் ஆண்டில் 8,059 ரூபாயாக இருந்த விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 12,698 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது 57.6 சதவீத உயர்வைக் குறிக்கிறது.
கிராமப்புறக் குடும்பங்கள் 2016-17 ஆம் ஆண்டில் சராசரியாக மாதம் 6,646 ரூபாய் செலவழித்த நிலையில், தற்போது 11,262 ரூபாய் செலவிடுகின்றன.
இது 2016-17 ஆம் ஆண்டில் இருந்த மாதாந்திர செலவுகளில் இருந்து சுமார் 69.4 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
கிராமப்புறங்களில் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையானது சுமார் 47.4 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுமார் 23.5 சதவீதக் குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது ஓய்வூதியம் பெறுகின்றனர் என்ற நிலையில் இது முன்னதாக 18.9 சதவீதமாக இருந்தது.
2016-17 ஆம் ஆண்டில் இருந்த 25.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், சுமார் 80.3 சதவீதக் குடும்பங்கள் தற்போது குறைந்தபட்சம் ஒரு காப்பீடு கொண்ட உறுப்பினரையாவது கொண்டிருக்கின்றன.
சுமார் 51.3 சதவீதக் குடும்பங்கள் சிறந்த நிதி தகவலைப் பெற்றுள்ளதாக பதிவு செய்து உள்ள நிலையில் இது முன்னதாக 33.9 சதவீதமாக இருந்தது.
சுமார் 9,104 ரூபாயாக இருந்த கிராமப்புறக் குடும்பங்களின் நிதிச் சேமிப்பு ஆனது தற்போது 13,209 ரூபாயாக உயர்ந்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் சுமார் 66 சதவீத கிராமப்புறக் குடும்பங்கள் சேமிப்புகளை மேற் கொண்டுள்ள நிலையில் இது 2016-17 ஆம் ஆண்டில் 50.6 சதவீதமாக இருந்தது.