TNPSC Thervupettagam

அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்க கணக்கெடுப்பு 2021-22

October 16 , 2024 37 days 97 0
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) சமீபத்திய இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • 2016-17 ஆம் ஆண்டு முதல் NABARD வங்கி மேற்கொண்ட இரண்டாவது கணக்கெடுப்பு இதுவாகும்.
  • 2016-17 ஆம் ஆண்டில் 1.08 ஹெக்டேராக இருந்த விவசாயிகளின் சராசரி நிலப் பரப்பு ஆனது 2021-22 ஆம் ஆண்டில் வெறும் 0.74 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
  • இது மூன்றில் ஒரு பங்கு (31 சதவீதம்) குறைவைக் குறிக்கிறது.
  • 2016-17 ஆம் ஆண்டில் 8,059 ரூபாயாக இருந்த விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 12,698 ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • இது 57.6 சதவீத உயர்வைக் குறிக்கிறது.
  • கிராமப்புறக் குடும்பங்கள் 2016-17 ஆம் ஆண்டில் சராசரியாக மாதம் 6,646 ரூபாய் செலவழித்த நிலையில், தற்போது 11,262 ரூபாய் செலவிடுகின்றன.
  • இது 2016-17 ஆம் ஆண்டில் இருந்த மாதாந்திர செலவுகளில் இருந்து சுமார் 69.4 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • கிராமப்புறங்களில் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையானது சுமார் 47.4 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • சுமார் 23.5 சதவீதக் குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது ஓய்வூதியம் பெறுகின்றனர் என்ற நிலையில் இது முன்னதாக 18.9 சதவீதமாக இருந்தது.
  • 2016-17 ஆம் ஆண்டில் இருந்த 25.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், சுமார் 80.3 சதவீதக் குடும்பங்கள் தற்போது குறைந்தபட்சம் ஒரு காப்பீடு கொண்ட உறுப்பினரையாவது கொண்டிருக்கின்றன.
  • சுமார் 51.3 சதவீதக் குடும்பங்கள் சிறந்த நிதி தகவலைப் பெற்றுள்ளதாக பதிவு செய்து உள்ள நிலையில் இது முன்னதாக 33.9 சதவீதமாக இருந்தது.
  • சுமார் 9,104 ரூபாயாக இருந்த கிராமப்புறக் குடும்பங்களின் நிதிச் சேமிப்பு ஆனது தற்போது 13,209 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 66 சதவீத கிராமப்புறக் குடும்பங்கள் சேமிப்புகளை மேற் கொண்டுள்ள நிலையில் இது 2016-17 ஆம் ஆண்டில் 50.6 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்