TNPSC Thervupettagam

அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முகாம்கள்

August 29 , 2017 2685 days 953 0
  • மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் “ஹஸ்தல்கா சஹாயோக் ஷிவிர்” (Hastkala Sahyog Shivir) என்ற முயற்சியின் கீழ் அகில இந்திய அளவிலான கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
  • முகாம்கள் நடத்தப்படும் தேதிகள்: அக்டோபர் 7, 2017 முதல் அக்டோபர் 17,2017 வரை.
  • ஜவுளித்துறை அமைச்சகம் நடத்தும் இந்த முகாம்கள் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் கரீப் கல்யான் வர்ஷிர்க்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் பிறந்த நாள் நூற்றாண்டான இந்த வருடம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் கரீப் கல்யான் வர்ஷ் (Pandit Deendayal Upadhyay Garib Kalyan Varsh) என்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த முகாம்களில் பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
    • நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு முத்ரா திட்டம் (Micro Units Development & Refinance Agency Ltd - MUDRA) வழியாக கடன் வசதிகள் செய்து தரப்படும்.
    • ஹத்கர்கா சம்வர்தன் சஹாயாதா (Hatgarga Samvardan Sahayada) திட்டம் வழியாக நெசவாளர்களுக்குத் தறிகள் , நவீன உபகரணங்கள், மற்றும் நூல் பற்றுவரவுப் புத்தகங்கள் (Yarn Pass Book) வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்