மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 85வது அகில இந்திய சபாநாயகர்கள் / அவைத் தலைவர்கள் மாநாட்டினை (AIPOC) பீகாரின் பாட்னாவில் தொடங்கி வைத்தார்.
கடைசியாக 1982 ஆம் ஆண்டில் இராதானந்தன் ஜா சபாநாயகராக இருந்த போது பீகாரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
அதற்கு முன்னதாக, இலட்சுமி நாராயண் சுதான்ஷு சட்டமன்ற சபாநாயகராக இருந்த போது, 1964 ஆம் ஆண்டு ஜனவரி 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் அந்த மாநிலம் இந்த மாநாட்டினை நடத்தியது.
AIPOC மாநாட்டின் முதல் அமர்வு ஆனது 1921 ஆம் ஆண்டில் சிம்லாவில் நடைபெற்றது.
84வது AIPOC ஆனது கடந்த ஆண்டு மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
முதலாவது AIPOC அமர்வின் 100 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் 82வது AIPOC ஆனது மீண்டும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிம்லாவில் நடைபெற்றது.