TNPSC Thervupettagam

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது

August 6 , 2017 2667 days 1105 0
  • அகில இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த புலிகள் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்துக்கு 4 ஆவது இடம்: 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்தது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் உள்ளதாக தெரிய வந்தது.
  • தமிழகத்தில் களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக வனத்துறையின் கணக்கெடுப்புப்படி சத்தியமங்கலத்தில் 64 புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முதுமலையில் 43-க்கும் அதிகமான புலிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
  • உயிரிழப்புகள்: தமிழகத்தில் 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசியப் புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் புலிகள் இறந்துள்ளன.
  • தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. அதேநேரத்தில், கடந்தாண்டில் (2015) தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. 2016 இல் மூன்று புலிகள் உயிரிழந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்