TNPSC Thervupettagam

அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்

August 18 , 2022 701 days 355 0
  • உலகக் கால்பந்துப் போட்டிக்கான ஆளுமை அமைப்பான சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்புச் சங்கமானது, மூன்றாம் தரப்பினரின் தேவையற்றத் தலையீட்டிற்காக அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பினை இடைநீக்கம் செய்தது.  
  • 1937 ஆம் ஆண்டு இந்த கூட்டமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து, இது போன்று நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல்முறையாகும்.
  • 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினால் 2022 ஆம் ஆண்டு மே 18 முதல் அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு ஆனது நிர்வகிக்கப்படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரஃபூல் படேல் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு, அந்த நிர்வாகக் குழுவானது உச்ச நீதி மன்றத்தினால் நியமிக்கப்பட்டது.
  • நிர்வாகக் குழு நியமிக்கப்பட்ட நிகழ்வானது, மூன்றாம் தரப்பின் தலையீடாகவும், அனைத்து நாடுகளும் தங்களது விவகாரங்களைச் சுதந்திரமான முறையில் நிர்வகிக்கக் கூறும், சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்புச் சங்கத்தின் சட்டங்களுக்கு எதிரானதாகவும் கருதப் படுகிறது.
  • இடைநீக்கம் என்பது, எந்தவொரு இந்திய அணியும், போட்டிக் குழுவும் (அ) நாடும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க இயலாது.
  • மேலும் 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான FIFA போட்டியினை நடத்தும் உரிமையையும் இந்தியா இழக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்