இது புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு 1937 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
விளையாட்டுத் துறையின் உலக நிர்வாக அமைப்பான FIFA அமைப்பினுடைய தொடர்பற்ற வெளிப்புறச் செல்வாக்கின் விளைவாக அதன் 85 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இது இடைநிறுத்தம் செய்யப் பட்டது.
ஆனால் பின்னர் அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் தடையானது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் FIFA சபை வாரியத்தினால் நீக்கப்பட்டது.
இது 2022 ஆம் ஆண்டில் FIFA 17 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டியினை நடத்த இந்தியாவிற்கு அனுமதியளிக்கும்.
அகில இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பின் புதியத் தலைவராக முன்னாள் கால்பந்து வீரர் கல்யாண் சவுபே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொல்கத்தாவில் உள்ள மோகன் பகான் குழு மற்றும் கிழக்கு வங்காளக் கால்பந்து குழு ஆகிய அணிகளில் கோல்கீப்பராக இருந்தார்.