TNPSC Thervupettagam

அகில இந்தியக் குடிமை தற்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை தினம் - டிசம்பர் 06

December 10 , 2024 12 days 57 0
  • 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதியன்று பழைய பம்பாய் மாகாணத்தில் ஊர்க் காவல் படை உருவாக்கப்பட்டது.
  • இது குடிமைசார் கலவரம் மற்றும் வகுப்புவாத கலவரங்களைக் கட்டுப்படுத்தச் செய்வதற்காக காவல்துறைக்கு உதவும் ஒரு தன்னார்வப் படையாகும்.
  • 1962 ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மத்திய அரசானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை ஏற்கனவே உள்ள தன்னார்வ அமைப்புகளை ஒரே சீரான தன்னார்வப் படையாக இணைக்க அறிவுறுத்தியது.
  • ஊர்க்காவல் படையானது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஊர்க் காவல் படை சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உருவாக்கப்படுகின்றன.
  • நாட்டில் உள்ள மொத்த ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை 5,73,793 ஆக உள்ளது, அதன் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கை 4,86,401 ஆக உள்ளது.
  • இந்த அமைப்பு ஆனது கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்