அரசு பணி விதிகளை மீறியதாகக் கூறி இரண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை கேரள அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.
அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968 (AIS விதிகள்) இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகளின் நடத்தையை நிர்வகிக்கிறது.
AIS விதிகள் ஆனது குடிமைப்பணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளை வழங்கச் செய்கின்றன.
AIS விதிகளின் படி, அவர்கள் அரசியலமைப்பு விழுமியங்களின் மேலாதிக்கத்தை கட்டி காக்க (நிலை நிறுத்த) வேண்டும்.
அவர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவதில் பொது ஊடகங்களில் பங்கேற்கலாம் அல்லது பங்களிக்கலாம்.
அவர்கள் எந்தவொருப் பொதுத் தள ஊடகத்திலும் அரசாங்கத்தின் கொள்கைகளை மோசமாக விமர்சிக்கக் கூடாது.
அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி, விமர்சனத்திற்கு உட்பட்ட அதிகாரப்பூர்வச் செயலை நிரூபிப்பதற்காக அவர்கள் எந்த ஒரு நீதிமன்றத்தையும் அல்லது எந்தவொரு பத்திரிகையையும் நாடக்கூடாது.