TNPSC Thervupettagam

அகில பாரதிய மராத்திய சாகித்ய சம்மேளனம்

January 18 , 2020 1688 days 595 0
  • மராத்திய எழுத்தாளர்களால் பங்கேற்கப்படும் இலக்கிய விவாதங்களுக்கான ஒரு வருடாந்திர மாநாடு இதுவாகும்.
  • சமீபத்தில் முடிவடைந்த இந்த மாநாட்டின் 93வது பதிப்பில், மராத்தி மொழியை ‘செம்மொழியாக’ அறிவிக்கக் கோரி தீர்மானம் ஒன்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தற்பொழுது, ஆறு மொழிகள் ‘செம்மொழி’ அங்கீகாரத்தைக் கொண்டுள்ளன. அவையாவன: தமிழ் (2004 இல் அறிவிக்கப்பட்டது), சமஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014) ஆகியவையாகும்.

வழிகாட்டுதல்கள்

  • 1500 - 2000 ஆண்டுகளில் அதன் பழமையான (முந்தைய) நூல்கள் / பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் உயர் தொன்மை.
  • பிற்கால தலைமுறையைச் சேர்ந்த மக்களால் மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்படும் பண்டைய இலக்கியம் / நூல்களின் அமைப்பு.
  • இலக்கிய மரபானது அசல் தன்மையுடையதாகவும் வேறு மொழி பேசும் சமூகத்திலிருந்து கடன் வாங்கப்படாமலும் இருக்க வேண்டும்.
  • செம்மொழியும் இலக்கியமும் நவீனத்திலிருந்து வேறுபடுவதால், செம்மொழிக்கும் அதன் பிற்கால வடிவங்களுக்கும் அல்லது அதன் கிளை மொழிகளுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்