அகுலா-1 பிரிவு தாக்கி அழிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்
March 9 , 2019 2089 days 566 0
இரஷ்யாவிடமிருந்து அகுலா-1 பிரிவு அணு ஆயுதத் திறன் கொண்ட தாக்கி அழிக்கும் நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுக் காலம் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரஷ்ய நாடு அகுலா – 1 பிரிவு நீர்மூழ்கிக் கப்பலை 2025 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைக்கு அளிக்கவிருக்கிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் சக்ரா III என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியக் கடற்படைக்கு குத்தகைக்கு அளிக்கப்படும் இரஷ்யாவின் 3-வது அணு ஆயுதத் திறன் கொண்ட தாக்கி அழிக்கும் நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.
இரஷ்யாவின் முதலாவது அணு ஆயுதத் திறன் கொண்ட தாக்கி அழிக்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பலானது 1988 ஆம் ஆண்டில் 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
இரண்டாவது ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கிக் கப்பலானது 2012 ஆம் ஆண்டில் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.