TNPSC Thervupettagam

அக்கறை பேணும் தோழமைத் திட்டம்

August 5 , 2017 2716 days 1023 0
  • பஞ்சாப் அரசாங்கம், “அக்கறை பேணும் தோழமைத் திட்டம் “ (Care Companion Programme - CCP) என்ற திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  • நோய்வாய்ப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி அளிப்பதன் மூலமாக நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் தோழமையினை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் , உடல் நலம் குன்றியவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுதும் , மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற பிறகும் அவர்களை கவனித்துக் கொள்வதற்குப் போதிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்