அக்சவி எனப்படுகின்ற பேரிடர்களுக்கானத் தனித்துவமான இணையவழி எண்ணிம கோப்புறை இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
அக்சவி என்பது ஆப்தா சதி விவரன் (பேரிடர் சேத விவரிப்பு) என்பதன் சுருக்கமாகும்.
இது சமூகங்கள் தங்கள் இழப்புகளை சுயமாக உள்ளிட வாய்ப்பளித்து, அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்து, எண்ணிம முறையின் மூலம் அவற்றின் முன்னேற்றத்தை வெளிப்படையாகக் கண்காணிக்கிறது.
இது நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்களையும் ஒரே எண்ணிமத் தளத்தில் கொண்டு வரும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் உருவாக்கப்பட்ட 'இணைய வழிப் பேரிடர் கோப்புரைகள்' தற்போது அரசாங்கத்தின் நீண்ட காலச் சமூக நலத் திட்டங்கள் மற்றும் குறியீட்டு அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப் பட்டுள்ளன.