TNPSC Thervupettagam
November 4 , 2018 2085 days 671 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று ஒடிசா கடற்பகுதியில் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட, அணு ஆயுதத் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி - 1 ஏவுகணையின் இரவுச் நேரச் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
  • தரையிலிருந்து தரையை நோக்கி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணைச் சோதனையானது ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து பயன்பாட்டாளர் சோதனையின் ஒரு பகுதியாக சோதனை செய்யப்பட்டது.
  • 700 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கைத் தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இரவு நேரச் சோதனையானது முதன்முறையாக 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்டது.
  • 700 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணையானது சிறப்பு ஊடுருவல் அமைப்பைக் கொண்டிருக்கிறது.
  • இந்த ஏவுகணையானது 12 டன்கள் எடையுடன் 15 மீட்டர் உயரத்தையும் 1000 கிலோ எடையுடைய ஆயுதத்தை எடுத்துச் செல்லும் திறனையும் கொண்டுள்ளது.
  • இந்த ஏவுகணையானது ஏற்கெனவே இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்