ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள டாக்டர். அப்துல் கலாம் தீவிலிருந்து நீண்ட தூர, கண்டம் விட்டு பாயும் சக்தியுடைய அணு ஆயதங்களைக் கொண்டுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அக்னி-5 தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில் இது ஆறாவது சோதனை முயற்சியாகும்.
5000 கிலோமீட்டர் அளவிற்கு வரம்பெல்லையை கொண்ட இந்த அக்னி-5 என்ற தரையிலிருந்து தரைக்கு குறிவைக்கும் ஏவுகணை நடமாடும் ஏவுகளத்தின் உதவியுடன் ஏவப்பட்டது.
மற்ற ஏவுகணைகளைப் போலல்லாது, இயந்திரம், ஆயுத கொள்திறன், வழிகாட்டுதல், வழி செலுத்துதல் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள மிகுந்த மேம்பட்ட ஏவுகணை அக்னி-5 ஆகும்.