TNPSC Thervupettagam
February 7 , 2018 2482 days 825 0
  • ஒடிஸாவில் உள்ள ஏவுகணை சோதனை வரம்பிலிருந்து பயன்பாட்டாளர் முன்னோட்டத்தின் (User Trial) ஒரு பகுதியாக இந்திய இராணுவத்தினால் அணு ஆயுதங்களை சுமந்த செல்லக் கூடிய உள்நாட்டு தொழில்நுட்பத் தயாரிப்பான  அக்னி I ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • உள்நாட்டுத் தொழிற் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இடைநிலை வரம்புடைய (Intermediate) இந்த ஏவுகணையானது ஒற்றை அடுக்கு எரிபொருள் நிலையுடைய (Single Stage Missile) தரையில் இருந்து நில இலக்கை நோக்கி ஏவக்கூடிய (Surface to Surface) ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணையானது ஏற்கனவே 2004-ஆம் ஆண்டு ஆயுதப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணையானது அக்னி I ஏவுகணையின் 18வது பதிப்பாகும்.
  • அக்னி I ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இமாரத் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து Advanced System Labaratory-ஆல் கண்டுபிடிக்கப்பட்டது.
  • உயர்நிலை துல்லியத்தோடு இலக்கினை தாக்கி அழிப்பதை உறுதி செய்வதற்கு உதவும் சிறப்பு வழிகாட்டு அமைப்பும் இந்த ஏவுகணையில் உள்ளது.
  • இந்தியாவின் “முதல் அணுஆயுத பயன்பாடில்லா கொள்கை”யின் (No first use policy) கீழ் இந்தியாவின் குறைந்தபட்ச நம்பத்தகு தடுப்பு அமைப்பின் (Minimum Credible Deterrence) ஒரு பகுதியாக அக்னி I ஏவுகணை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்