ஒடிஸாவில் உள்ள ஏவுகணை சோதனை வரம்பிலிருந்து பயன்பாட்டாளர் முன்னோட்டத்தின் (User Trial) ஒரு பகுதியாக இந்திய இராணுவத்தினால் அணு ஆயுதங்களை சுமந்த செல்லக் கூடிய உள்நாட்டு தொழில்நுட்பத் தயாரிப்பான அக்னி I ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழிற் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இடைநிலை வரம்புடைய (Intermediate) இந்த ஏவுகணையானது ஒற்றை அடுக்கு எரிபொருள் நிலையுடைய (Single Stage Missile) தரையில் இருந்து நில இலக்கை நோக்கி ஏவக்கூடிய (Surface to Surface) ஏவுகணையாகும்.
இந்த ஏவுகணையானது ஏற்கனவே 2004-ஆம் ஆண்டு ஆயுதப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணையானது அக்னி I ஏவுகணையின் 18வது பதிப்பாகும்.
அக்னி I ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இமாரத் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து Advanced System Labaratory-ஆல் கண்டுபிடிக்கப்பட்டது.
உயர்நிலை துல்லியத்தோடு இலக்கினை தாக்கி அழிப்பதை உறுதி செய்வதற்கு உதவும் சிறப்பு வழிகாட்டு அமைப்பும் இந்த ஏவுகணையில் உள்ளது.
இந்தியாவின் “முதல் அணுஆயுத பயன்பாடில்லா கொள்கை”யின் (No first use policy) கீழ் இந்தியாவின் குறைந்தபட்ச நம்பத்தகு தடுப்பு அமைப்பின் (Minimum Credible Deterrence) ஒரு பகுதியாக அக்னி I ஏவுகணை உள்ளது.