இந்தியாவில் 'அக்னி ஏவுகணைகளின் தந்தை' என்று அழைக்கப்படும் இராம் நரேன் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாத்தில் காலமானார்.
அவர் அக்னி ஏவுகணை திட்ட இயக்குநராகவும், ஐதராபாத்தில் உள்ள ASL (மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் ஆய்வகம்) இயக்குநராகவும் பணியாற்றினார்.
1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2005 ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும் வரை அந்தத் திட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
மத்திய அரசானது அவருக்கு 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கியது.
1983 ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐந்து ஏவுகணைகளில் அக்னி ஏவுகணை மிகவும் இலட்சிய நோக்கமிக்கது ஆகும்.
மற்ற 4 ஏவுகணைகள் - பிருத்வி, ஆகாஷ், நாக் மற்றும் திரிசூல் ஆகியனவாகும்.