TNPSC Thervupettagam
August 21 , 2024 93 days 227 0
  • இந்தியாவில் 'அக்னி ஏவுகணைகளின் தந்தை' என்று அழைக்கப்படும் இராம் நரேன் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாத்தில் காலமானார்.
  • அவர் அக்னி ஏவுகணை திட்ட இயக்குநராகவும், ஐதராபாத்தில் உள்ள ASL (மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் ஆய்வகம்) இயக்குநராகவும் பணியாற்றினார்.
  • 1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2005 ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும் வரை அந்தத் திட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • மத்திய அரசானது அவருக்கு 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கியது.
  • 1983 ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐந்து ஏவுகணைகளில் அக்னி ஏவுகணை மிகவும் இலட்சிய நோக்கமிக்கது ஆகும்.
  • மற்ற 4 ஏவுகணைகள் - பிருத்வி, ஆகாஷ், நாக் மற்றும் திரிசூல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்