புதிய தலைமுறை தொழில்நுட்பத்தைச் சார்ந்த அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
அக்னி வகை ஏவுகணைகளில் ‘அக்னி பிரைம்’ அல்லது ‘அக்னி-P’ என்பது புதிய தலைமுறை தொழில்நுட்பத்தைச் சார்ந்த அணுசக்தித் திறன் கொண்ட மேம்படுத்தப் பட்ட வகையாகும்.
இந்த ஏவுகணை அதிகபட்சமாக 1,000 முதல் 2,000 கிலோமீட்டர் தொலைவு வரையில் செல்லக் கூடிய உலோகக் கொள்கலன் மூலம் ஏவும் வசதி கொண்ட இரண்டு கட்ட எரி பொருள் கொண்ட ஏவுகணையாகும்.
‘அக்னி பிரைம்’ ஏவுகணை என்பது இதுவரையில் உருவாக்கப்பட்ட அனைத்து அக்னி ரக ஏவுகணைகளையும் விட இலகுவானது.
இது அக்னி 3 ரக ஏவுகணையை விட சுமார் 50 சதவீதம் குறைவான எடை கொண்டது மற்றும் புதிய வழிகாட்டுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளைக் கொண்டுள்ளது.