TNPSC Thervupettagam

அக்னி-பிரைம் ஏவுகணை 2024

April 8 , 2024 102 days 257 0
  • புதிய தலைமுறை தொழில்நுட்பத்தைச் சார்ந்த அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி பிரைம்ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
  • அக்னி வகை ஏவுகணைகளில் அக்னி பிரைம்அல்லது அக்னி-P’ என்பது புதிய தலைமுறை தொழில்நுட்பத்தைச் சார்ந்த அணுசக்தித் திறன் கொண்ட மேம்படுத்தப் பட்ட வகையாகும்.
  • இந்த ஏவுகணை அதிகபட்சமாக 1,000 முதல் 2,000 கிலோமீட்டர் தொலைவு வரையில் செல்லக் கூடிய உலோகக் கொள்கலன் மூலம் ஏவும் வசதி கொண்ட இரண்டு கட்ட எரி பொருள் கொண்ட ஏவுகணையாகும்.
  • அக்னி பிரைம்ஏவுகணை என்பது இதுவரையில் உருவாக்கப்பட்ட அனைத்து அக்னி ரக ஏவுகணைகளையும் விட இலகுவானது.
  • இது அக்னி 3 ரக ஏவுகணையை விட சுமார் 50 சதவீதம் குறைவான எடை கொண்டது மற்றும் புதிய வழிகாட்டுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்