பாதுகாப்பு மற்றும் இராணுவ மேம்பாட்டு அமைப்பானது, உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட புதிய தலைமுறை தொழில்நுட்பத்தினைச் சார்ந்த அணுசக்தி திறன் கொண்ட, நடுத்தர தொலைவு வரம்புடைய ஏவுகணையான அக்னி பிரைம் (அக்னி-பி) ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது.
இது இரண்டு கட்ட உலோகக் கொள்கல ஏவு அமைப்பு கொண்ட ஏவுகணையாகும்.
இது அக்னி ரக ஏவுகணை தொடரின் சமீபத்திய மற்றும் ஆறாவது வகையாகும்.
இது ஒருங்கிணைந்த மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப் பட்டது.
இந்த ஏவுகணையானது, 1,000 - 2,000 கிமீ தொலைவில் உள்ள தனித்தனி இடங்களுக்கு பல போர் ஆயுதங்களை ஏவும் திறன் கொண்டது.