மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகமானது, வேளாண் விளைபொருள்களுக்கு தரச் சான்றளிப்பு முத்திரையான ‘அக்மார்க்’ தொடர்புடைய விண்ணப்பங்களை செயலாக்குவதற்காக ஆன்லைன் மென்பொருளை துவங்கியுள்ளது.
அக்மார்க் சான்று முத்திரையானது சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் என்ற அரசு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளை கொண்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்துகிறது.
இது 1937 ஆம் ஆண்டின் வேளாண் உற்பத்தி (தரப்படுத்தல் மற்றும் குறியிடுதல்) சட்டத்தால் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது (1986 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது).
அக்மார்க் ஆன்லைன் அமைப்பானது நாடு முழுவதும் தரக் கட்டுப்பாட்டு செயல்பாடுகளை நடத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது. இது 24 x 7 என்ற வகையில் அணுகக் கூடியதாகும்.