அஸ்பேரிஜானின் தலைநகரான பாகுவில் அமைந்துள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் அரங்கில் முதன்முறையாக இரண்டு நாள் நிகழ்வான FIG அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பைப் போட்டி நடத்தப் பட்டது.
ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவிற்கானப் போட்டிகளில் இந்தியா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.
பிரின்ஸ் அரிஸ், சித்தேஷ் போஸ்லே, ருஷிகேஷ் மோர் மற்றும் ரெஜிலேஷ் சூரிபாபு ஆகியோர் 20.560 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்தியாவின் பெண்கள் மூவர் குழுவான ஆயுஷி கோதேஷ்வர், ப்ராச்சி பார்கி மற்றும் மிருண்மயி வால்டே ஆகியோர் 18.200 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.