இந்திய தேர்தல் ஆணையம் ஆனது, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், பொதுவான தேர்தல் சின்னத்தைப் பெறுவதற்கு கூடுதல் நிதி ஆவணங்கள் மற்றும் தேர்தல் செலவின அறிக்கைகளை வழங்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சின்ன ஒதுக்கீட்டு செயல்பாட்டில் உள்ள வெளிப்படைத்தன்மையை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் மாநில அல்லது தேசியக் கட்சிகளாகத் தகுதி பெறாத அரசியல் கட்சிகளைக் குறிக்கும்.
இதில்,
இன்னும் தங்களை முழுமையாக நிறுவிக்கொள்ளாத புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள்
பதிவுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத கட்சிகள்
அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான அளவிற்குச் சமீபத்திய மாநில அல்லது தேசிய தேர்தல்களில் போதுமான வாக்குகளைப் பெறாத கட்சிகள், ஆகியவை அடங்கும்.